சேரன் - செங்குட்டுவன் (Cheran


1.3 oleh Bharani Multimedia Solutions
Sep 16, 2019 Versi Lama

Mengenai சேரன் - செங்குட்டுவன் (Cheran

சேரன் - செங்குட்டுவன் சரித்திர ஆராய்ச்சி கட்டுரைகள்

சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan):

சேரன்-செங்குட்டுவனைப்பற்றி முன்னூல்களிற்கண்ட விஷயங்களை, நவீன முறையில் ஆராய்ந்து ஒரு சரித்திரமாகத் தொகுத்தெழுத வேண்டும் என்பது எனது நெடுநாளவாஆகும். இச்சேரனை நான் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; முதலாவது பண்டைத்தமிழ் வேந்தருள்ளே இவன் பெருமை பெற்றவனாதலோடு, ஏனைத் தமிழரசரினும் இவனது வரலாறு சிறிது அதிகமாகவும் காணப்பட்டது. இரண்டாவது என்னாராய்ச்சியிற்கண்ட சில கருத்துக்களை வெளியிடுதற்கு இவன் சரித்திரமே ஏற்றதாயிருந்ததாகும். இவ்விருவகையாலும் நிகழ்ந்த என் சிறுவிருப்பத்தை இப்போது கைகூட்டுவித்த திருவருளைச்சிந்தித்து வந்திக்கின்றேன். இவ்வாராய்ச்சிக்குச் செங்குட்டுவனைப்பற்றிய சிலப்பதிகார வஞ்சிக்காண்டம், சிறந்த கருவியாயாயிற்று. அடியார்க்கு நல்லாருரை இப்பகுதிக்குக் கிடையாதது விசனிக்கத்தக்கதாயினும், அவர்க்கும் முற்பட்ட அரும்பதவுரையொன்று வெளிவந்திருப்பது ஒருவாறு மகிழத்தக்கதே. இவ்வரும் பதவுரையைப் பெரும்பான்மை தழுவி, அக்காண்டத்தின் செய்யுணடையை இயன்றளவில் உரைநடைப்-படுத்தலானேன். செந்தமிழ்வளஞ் செறிந்துள்ள இளங்கோவடிகளது 'பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின்-றெழுதத்தொடங்கினேன் "இல்லையாயினும், அவ்வடிகளது அரும்பெருங் கருத்துக்களைத் தமிழபிமானிகளெல்லாம் அறிந்து மகிழவேண்டும் என்னும் பேரவாவே இம்முயற்சியில் என்னைத்தூண்டியது.

உள்ளடக்கம்:

முகவுரை

1. முன்னுரை

2. சேரவமிசத்தோர்

3. செங்குட்டுவன் போர்ச்செயல்கள்

4. செங்குட்டுவன் காலத்து இரண்டு சரித நிகழ்ச்சிகள்

5. செங்குட்டுவனது வட நாட்டியாத்திரை

6. செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்

7. செங்குட்டுவன் சமயநிலை

8. செங்குட்டுவன் சமகாலத்தரசர்

9. செங்குட்டுவனைப் பாடிய இருபெரும் புலவர்கள்

10. செங்குட்டுவன் நாடும் - வஞ்சி மாநகரமும்

11. செங்குட்டுவன் அரசியல்

12. செங்குட்டுவன் குணாதிசயங்கள்

13. செங்குட்டுவன் காலவாராய்ச்சி

14. முடிவுரை

Pemaju:

Penyelesaian Multimedia Bharani

Chennai - 600 014.

E-mel: bharanimultimedia@gmail.com

Apa yang baru dalam versi terkini 1.3

Last updated on Oct 5, 2019
சேரன் - செங்குட்டுவன் சரித்திர ஆராய்ச்சி கட்டுரைகள்

Maklumat APLIKASI tambahan

Versi Terbaru

1.3

Dimuat naik oleh

Jose Andres

Memerlukan Android

Android 4.4+

Available on

Laporkan

Tandai sebagai tidak sesuai

Tunjukkan Lagi

சேரன் - செங்குட்டுவன் (Cheran Alternatif

Dapatkan lebih banyak daripada Bharani Multimedia Solutions

Cari