Usar la aplicación APKPure
Obtener Siva Dhamodaran Iyya versión histórica en Android
முற்றோதல் நடத்துதலைத் தவமாய்கொண்டு வாழும்திருவாசகச் சித்தர்
திருக்கழுக்குன்றம்,தேசுமுகிப்பேட்டையில் சைவப் பெருங்குடியில் தெய்வத்திருவாளர்கள் சிவ குப்புசுவாமி சிவ கன்னியம்மாள் அம்மை இணையர்க்கு அருந்தவப்புதல்வராய் மலர்ந்தவர் தவத்திரு. சிவ.தாமோதரன் அய்யா அவர்கள். இளமை முதலே சைவத்தின்பால் மாறாப் பற்றும் ஆராக் காதலும் கொண்டவர். 'சிவமே' மெய்ப்பொருள் எனறெண்ணி வாழ்பவர். 'நிதியமாவன நீறுகந்தான் நீள்கழல்களே' என சிந்தித்து ஒழுகுபவர்.தம்மைச் சார்ந்தாரையும் அவ்வாறே ஒழுகத் தூண்டுபவர். சைவத் திருமுறைகள்பால் அளவிலா ஈடுபாடு கொண்டவர்.மணிவாசகர் அருளிய திருவாசகத்தை முற்றோதல் வழி தம் இசைத்திறத்தால் அகிலமெலாம் கொண்டு சேர்க்கும் அருளாளர்.
திருவாசகம் மட்டுமன்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத்தையும் முற்றோதல் மூலம் சைவம் போற்றும் உயரிய பணியினை அயராது ஆற்றி வருகிறார்.
பொருட்பற்றின்றி அருட்பற்றொன்றையே பற்றிவாழும் பெரும் பேறாளர்.தம் சீடர்களையும் அடியார்களையும் பேணும் சீராளர்.
செயலி சிறப்பம்சங்கள்
★ திருவாசகம் பாடல்கள் .
★ சிவஞான வித்து பாடல்கள் .
★ சைவ கேள்வி பதில்
★ திருவாசக முற்றோதல் பெருவிழா.
தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற செயலி கிடக்க அது வகை செய்யும்.
இந்த செயலி சிவனடியார்களுக்கும் , எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன்..
தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
Last updated on 21/06/2020
Online Player Issue Fixed
Notification Player Issue Fixed
Fixed minor issues
Presentado por
Poliana Oliveira
Requisitos
Android 5.0+
Categoría
Reportar
Siva Dhamodaran Iyya
1.0.6 by Virutchamsoft Technologies
21/06/2020