Use APKPure App
Get Kolavizhi Amma old version APK for Android
அமைந்துள்ள கோலவிழி அம்மன் கோவில் தொன்மை।
எங்கள் கோலவிழி அம்மனே நாங்கள் வணங்கும் ராஜ காளியம்மனே எங்களுக்காக யுத்தம் செய்யும் பாளையத்துத் தாயே அம்மனே பங்காரு மாயம்மா நாங்கள் வழிப்படும் முத்து மாரியம்மா பத்ரகாளியம்மா
முண்டக்கன்னியம்மா எங்க கன்னியம்மா
குங்கும கோதையே
அன்னை யேசோதையே
செந்தூரத் தெய்வானை
சிங்கார பூபதி
அன்னை விசாலாட்சியே
சௌடாம்பா விருப்பாட்சியே
சுந்தர நீலியே சௌந்தர மாளியே
வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்காளம்மா எங்கள் செங்காலயம்மா
அருள் முப்பாத்தம்மா
சிங்காரி ஒய்யாரி
சிலம்பாயி உமையாம்பா
பன்னாரி பண்டாரி
செல்லாயி சிலம்பாயி
எங்கள் மருவத்தூர் மாரியே
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
கண் திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
கண் திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா
குற்றம் ஏதும் இல்லாத ஒரு உத்தம நெஞ்சுக்குச் சோதனைகள் எதுக்கு அம்மா.
அவர் கட்டிய தாலிக்கும் வைத்த பொட்டுக்கும் பூவுக்கும் நீ எனக்குக் காவல் கொடு.
நீதிக்குக் கண் தந்து
சோதிக்கும் தும்பத்தைக் காண செய்து நீயே நேரில்
வந்து மாற்றிவிடு அம்மா.
நான் மடி ஏந்தி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்
அம்மா நீ எனக்கு மறு வாழ்வு தர வேண்டும் என்று உன்னைக் கேட்கிறேன்.
நான் மடி ஏந்தி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்
அம்மா நீ எனக்கு மறு வாழ்வு தர வேண்டும் என்று உன்னைக் கேட்கிறேன்.
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
கண் திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா.
கண்கள் காணாத பொய் வழக்கு எங்கள் மீது வீணாக வந்திருக்கு
எங்களுக்காக வாதாட சாட்சி ஏதும் இல்லை அம்மா.
இந்த ஊர் வாழ நல்ல ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ எனக்கு ஒரு நீதியைக் கூறிவிடு அம்மா.
எனக்கு வந்த சோதனையும் வேதனையும் சேர்த்து விட்டேன் உன் கால் அடியில் கொண்டு வந்துவிட்டேன்.
என் சோகங்களையும் அவர்கள் எனக்குச் செய்த துரோகங்களையும் போக்கிவிடு என் வழியில்.
என்னை வாழ்வு அரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
உன் வாசல் வந்த இந்தப் பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா
இந்த அகிலம் ஆண்ட ஈஸ்வரியே நீ சபை ஏறு அம்மா.
அவர் மீது விழுந்த வீண் பழியைத் தீர்த்துவிடு அம்மா
திருப்பத்தூர் கௌமாரியே
திருவானைக்காவம்மா.
எங்கள் மாங்காட்டுக் காமாட்சி மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரியே
கன்னியாகுமாரியே
மலையனூர் செண்பகம்
மயிலாப்பூர் கற்பகமே.
நான் வணங்கும் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
துர்க்கை அம்மாவே
துளுக்கானத்து அம்மாவே
முக்குழி அம்மாவே
வளஞ்சி அம்மாவே
எல்லை அம்மாவே
கங்கை அம்மாவே
நாச்சியம்மா கொஞ்சும் பேச்சியம்மா.
அன்னை மூகாம்பிகா
எங்கள் யோகாம்பிகையே
அடி அலமேலு அம்மா தாயே வரிக்கோல் அம்மா
தூய பச்சை அம்மா வீரம் நிறைந்த படவேட்டம்மா.
பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி
அம்மாயி பொம்மாயி அழகு அம்மா கனகம்மா
ஆதி பராசக்தியே.
ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீ தானே பூமி மீதிலே.
ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் நீராகும் உந்தன் காலிலே.
வேண்டினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்க வந்த மங்கலமே
சத்தியத்தைக் காக்க வந்த சக்கரத்தைச் சுற்றி விடு.
உக்கிரத்தில் நீ இருந்து உண்மைக்கு ஒரு வெற்றிக் கொடு.
உன் நீதி பூமியில் தவறு ஆகுமா. என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா.
தெப்பக் குளத்தம்மா
தேரடி பூவம்மா
மஞ்சளே நீ அம்மா
மந்தவெளி அம்மா.
அர்த்தனாரியம்மா அன்னபூரணி அம்மா
வடிவுடையம்மாவே
திரிப்புரசுந்தரியே
வேற்காளியம்மா
கஸ்தூரி தாயம்மா
உருமாறி உலகம்மா
ருத்ரன திலகம்மா
உண்ணாமுலை அம்மா
பன்னாரி அம்மாவே
பாகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
ஜெகதீஸ்வரி அன்னையே பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி கருமாரி மகாமாயி
மாமுண்டி சாமுண்டி அங்காளி அத்தாயீ
சோலை அம்மா நீ இங்கே ஓடி வா.
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
கண் திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா.
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
கண் திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா.
குற்றம் இல்லாத ஒரு உத்தம நெஞ்சுக்குச் சோதனைகள் எதுக்கு
அவர் கட்டிய தாலிக்கும்
பொட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு
நீதிக்குக் கண் தந்து
சோதிக்கும் தும்பத்தை நீ
வந்து மாற்றிவிடு அம்மா.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் என்று உன் நாமத்தை உச்சரிக்கிறேன்.
Last updated on Aug 17, 2021
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Android প্রয়োজন
4.1
রিপোর্ট করুন
Kolavizhi Amma
Kolavizhi-kv by VT LABS
Aug 17, 2021